விஷ்ணு விஷால், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

இந்தபடம் கோடை காலத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘இரண்டு வானம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியான ஆர்யன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு "இரண்டு வானம்" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தபடம் கோடை காலத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com