அதர்வாவின் 'தணல்' பட ரிலீஸ் அப்டேட்

ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள 'தணல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
அதர்வாவின் 'தணல்' பட ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

நடிகர் அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது 'பராசக்தி, டிஎன்ஏ, இதயம் முரளி' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அஸ்வின், லாவண்யா, பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ள இத்திரைப்படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'தணல்' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகர் அதர்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, படத்தின் ரிலீஸை அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஜூலை மாதம் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com