ரியோ ராஜ் நடித்துள்ள "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் 2-வது பாடல் வெளியீடு

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
ரியோ ராஜ் நடித்துள்ள "ஸ்வீட்ஹார்ட்" படத்தின் 2-வது பாடல் வெளியீடு
Published on

சென்னை,

கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனைத்தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் நடித்து கவனம் பெற்றார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் 2-வது பாடலான 'கதவை திறந்தாயே' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com