’பெண்ணின் வலியும் வேதனையும் யாருக்கும் தெரியாது’ - நடிகை ரிது சவுத்ரி உருக்கம்

பெண்களின் வாழ்க்கை குறித்து ரிது சவுத்ரியின் பதிவு வைரலாகி உள்ளது.
’பெண்ணின் வலியும் வேதனையும் யாருக்கும் தெரியாது’ - நடிகை ரிது சவுத்ரி உருக்கம்
Published on

சென்னை,

சீரியல்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரிது சவுத்ரி, சமீபத்தில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இறுதி வரை தங்கி 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறினார்.

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள ரிது சவுத்ரி சமீபத்தில் சமூக வலைதளத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். பெண்களின் வாழ்க்கை குறித்து அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த இந்த பதிவு திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read
விவாகரத்துக்குப் பின்... பஞ்சாப் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா
’பெண்ணின் வலியும் வேதனையும் யாருக்கும் தெரியாது’ - நடிகை ரிது சவுத்ரி உருக்கம்

அதில், “இந்த சமூகம் பெண்களின் குணநலன்களை எளிதாக தீர்மானித்து விடுகிறது. முன்பு என்ன நடந்தது என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களின் அன்பு, பாசம் குறித்து யாரும் அறிய விரும்புவதில்லை. உறவுகள் முறிந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், அனைவரின் முன்பும் சிரித்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவளது வலியும் வேதனையும் இந்த சமூகம் பார்க்காது. இறுதியில் ஏமாற்றப்படுவது ஒரு பெண்ணே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சில நேரங்களில் நட்பு கூட ஆயுதமாக மாறுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணை குற்றம் சாட்டி, கவனம் பெற முயற்சிக்கிறார். உண்மையை அறிந்திருந்தாலும், சிலர் அமைதியாகவே இருப்பார்கள். அது பலவீனம் அல்ல” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ரிது சவுத்ரியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com