“என் அப்பா மைக்கேல் ஜாக்சன்” - சிறுவயதில் சொன்ன பொய்யால் சிக்கிய நடிகர்

ராபர்ட் பட்டின்சன் தற்போது ‘தி டிராமா’ திரைப்படம் நடித்துள்ளார்.
“என் அப்பா மைக்கேல் ஜாக்சன்” - சிறுவயதில் சொன்ன பொய்யால் சிக்கிய நடிகர்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பட்டின்சன், தான் நடித்துள்ள ‘தி டிராமா’ படம் ரிலீசாக உள்ளநிலையில், அளித்த பேட்டியில், சிறுவயதில் செய்த ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மைக்கேல் ஜாக்சன் பாடலை ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்து, அது தனது அப்பா பாடியது என்று பட்டின்சன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Also Read
"கடமைக்காக பாராட்டுகிறார்களா? - 'துரந்தர் 2' குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு - வைரல்
“என் அப்பா மைக்கேல் ஜாக்சன்” - சிறுவயதில் சொன்ன பொய்யால் சிக்கிய நடிகர்

மேலும், தன் அப்பா ஒரு மருந்து எடுத்ததால் இப்படிப் பாடுகிறார் என்று நண்பர்களிடம் கூறியதாகவும் , அந்த பொய்யால் பள்ளியில் பிரச்சனையில் சிக்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

அதேபோல், தனது 2 வயது மகள் குறித்து பேசிய அவர், “என் மகள் என்ன சொன்னாலும் உடனே உண்மை பொய்யை கண்டுபிடித்துவிடுவாள்” என்று நகைச்சுவையாக கூறினார். இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஏ24 நிறுவனம் தயாரித்துள்ள ‘தி டிராமா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெண்டயா மற்றும் ராபர்ட் பட்டின்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஸ்டோபர் போர்க்லி எழுதி இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் டிராமா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com