"கடமைக்காக பாராட்டுகிறார்களா? - 'துரந்தர் 2' குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு - வைரல்

அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் படத்தை பாராட்டினர்.
"கடமைக்காக பாராட்டுகிறார்களா? - 'துரந்தர் 2' குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு - வைரல்
Published on

மும்பை,

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 19-ம் தேதி வெளியான 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தைப் பாராட்டிய தென்னிந்திய நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு முன்னணி நடிகர்கள் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் படத்தை பாராட்டினர்.

இதற்கு ஒரு நெட்டிசன், “அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் , விஜய் தேவரகொண்டா போன்றவர்கள் படத்தை பாராட்டியுள்ளனர். ஆனால் பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் டுவீட் செய்யவில்லையே?” என்று கேள்வி எழுப்பினார்.

Also Read
அடுத்த ஹீரோ ரெடி… ’துரந்தர்’-ஐ விட 3 மடங்கு பட்ஜெட்டில் புதிய படம் - ஆதித்யா தாரின் மாஸ்டர் பிளான்
"கடமைக்காக பாராட்டுகிறார்களா? - 'துரந்தர் 2' குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு - வைரல்

இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “அது தெற்குக்கும் பரவியிருக்கிறது போல” என்று குறிப்பிட்டார். அதாவது, யாரோ கூறியதால் அல்லது கடைமைக்காக தான் தெலுங்கு நட்சத்திரங்கள் இப்படத்தைப் பாராட்டுகின்றனர் என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய ’துரந்தர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு எதிர்பார்ப்பின்றி வெளியான முதல் பாகம் ரூ.1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, குறுகிய இடைவெளியில் வெளியான ’துரந்தர் 2’ தற்போது எதிர்பார்ப்புகளை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com