சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சவுதி அரேபியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் ரொனால்டோவும், சல்மான்கானும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Published on

ரியாத்,

சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கானும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவும் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் சல்மான் கானை கண்டு கொள்ளாமல் ரொனால்டோ செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் தனது மனைவியுடன் உள்ளே நுழையும் ரொனால்டோ, அங்கு நின்று கொண்டு இருந்த சல்மான்கானை கண்டு கொள்ளாமல் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சல்மான்கானை ரொனால்டோ அவமதித்து விட்டதாக சிலர் கருத்துகளை தெரிவித்தனர். மேலும் ரொனால்டோவுக்கு சல்மான்கானை தெரிய வாய்ப்பில்லை எனவும் சிலர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சல்மான்கானுடன் ரொனால்டோ சிரித்து பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com