

சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’ பாடலை வெளியிட்டுள்ளார்.
சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.
சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘மார்ஷல்’, அட்லி இயக்கும் படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்டீ பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் அபயங்கர், தற்போது முன்னணி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். புதுமையான இசை அணுகுமுறையால் தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடலான ‘ராதிமா’ வெளியானது. இந்த இசை ஆல்பத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் சாய் அபயங்கருடன் நடனமாடியுள்ளார்.
சாய் அபயங்கர் இசையமைத்து, பாடி சமீபத்தில் வெளியான ‘பவழமல்லி’ இன்டீ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.