"நான் அப்படிச் சொல்லவே இல்லை" - பழைய சர்ச்சையால் வேதனை அடைந்த சாய் பல்லவி

சாய் பல்லவி, தான் சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பரப்பப்பட்டதை கண்டு அழுததாகத் தெரிவித்துள்ளார்.
"நான் அப்படிச் சொல்லவே இல்லை" - பழைய சர்ச்சையால் வேதனை அடைந்த சாய் பல்லவி
Published on

சென்னை,

தென்னிந்தியத் திரையுலகின் 'நேச்சுரல் பியூட்டி' என அழைக்கப்படும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்து வருகிறார். புகழின் உச்சத்தில் இருந்தாலும், அவர் மலையாளி அல்ல என்ற பழைய விவகாரம் குறித்த சர்ச்சை அவ்வப்போது சமூக வலைதளங்களில் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சாய் பல்லவி உருக்கமான விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர், "நீங்கள் மலையாளி (Malayali actors) எப்படி இவ்வளவு அழகாகத் தெலுங்கு பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, "நான் மலையாளி அல்ல, நான் ஒரு தமிழ்ப் பெண்" என்று குறிப்பிட்டார்.

Also Read
’உங்கள் பிரார்த்தனைகளும் ஆதரவும்’... ரசிகர்களுக்கு அஜித் போட்ட பதிவு - வைரல்
"நான் அப்படிச் சொல்லவே இல்லை" - பழைய சர்ச்சையால் வேதனை அடைந்த சாய் பல்லவி

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் இந்த வீடியோவைத் தவறாகச் சித்தரித்து, "தன்னை மலையாளி என்று அழைத்ததற்காக சாய் பல்லவி கோபமடைந்தார்" எனப் பொய்யான செய்திகளைப் பரப்பினர். இது மலையாள ரசிகர்கள் மத்தியில் தேவையற்ற விவாதத்தை உருவாக்கியது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சாய் பல்லவி, தான் சொல்லாத ஒன்றை சொன்னதாகப் பரப்பப்பட்ட செய்திகளைக் கண்டு அழுததாகத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில்,

"நான் சொல்லாத விஷயங்களைச் சொன்னதாக என் மீது குற்றம் சுமத்தியது எனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது. அதை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். நான் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவள். எனது பூர்வீகம் மற்றும் தாய்மொழி தமிழ் என்பதை மட்டுமே நான் அங்கு குறிப்பிட்டேன். மற்ற மொழிகளையோ அல்லது மக்களையோ குறைத்து மதிப்பிடும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை" என்றார்.

சாய் பல்லவி தற்போது தனது கெரியரில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. தமிழில் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com