பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த நிலையில் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com