'சல்மான் கான் அதற்கு பொருத்தமாக இருப்பார்' - பிரக்யா ஜெய்ஸ்வால்

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ’டாகு மகாராஜ்’ படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்திருந்தார்.
சென்னை,
தமிழில், 'விரட்டு' என்ற படத்தில் நடித்திருந்தவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தி, கன்னடத்திலும் அதிகமாக நடித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அகண்டா என்ற படத்தில் நடித்திருந்த இவர், மீண்டும் அவருடன் 'டாகு மகாராஜ்' படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
கடந்த 12-ம் தேதி வெளியான் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரக்யா ஜெய்ஸ்வால், டாகு மகாராஜ் படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க யார் பொருத்தமாக இருப்பார்? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சல்மான் கான் அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் உண்மையில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பார்' என்றார்.
Related Tags :
Next Story






