சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்'; அக்சய் குமாருக்கு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு

நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

மும்பை,

பிரபல இந்திப்பட நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் திரைப்பட தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான அவரது தந்தை சலீம் கானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

இது தொடர்பாக கொலை மிரட்டல் கடிதத்தை மும்பை போலீசாரிடம் கொடுத்து சல்மான் கான் புகார் அளித்து இருந்தார். இதை தொடர்ந்து மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து மாநில அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், அனுபம் கெர் ஆகியோருக்கு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com