'சிக்கந்தர்' படம் : தீவிர உடற்பயிற்சியில் சல்மான் கான்

சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
'சிக்கந்தர்' படம் : தீவிர உடற்பயிற்சியில் சல்மான் கான்
Published on

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்பேது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு "புராணக் கதை' படமாகும்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இப்படத்தில் இணைந்து உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஆக்சன் படமாக உருவாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் சல்மான் கான் விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தனது வரவிருக்கும் சிக்கந்தர் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். மேலும் இது குறித்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர் உற்சாகமடைந்து சல்மான் கானின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com