சல்மான் கான் - நயன்தாரா கூட்டணி... ரூ.100 கோடிக்கு விற்பனையான ‘மான்ஸ்டர்’ படம்

இந்த படத்தை விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி உள்ளார்.

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணி... ரூ.100 கோடிக்கு விற்பனையான ‘மான்ஸ்டர்’ படம்
Published on: 

சென்னை,

நயன்தாரா - சல்மான் கான் என இரு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா - சல்மான் கான் இணையும் ‘மான்ஸ்டர்’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘மான்ஸ்டர்’. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

வம்சி பைடிபல்லி இயக்கம்

விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி, ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு, தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறார். படத்தில் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோருடன் அரவிந்த் சாமி, ஜாக்கி ஷெராப், ராகுல் தேவ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2027 ரமலான் பண்டிகைக்கு ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம், 2027-ம் ஆண்டு ரமலான் (ஈத்) பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.100 கோடிக்கு வெளியீட்டு உரிமை?

இந்நிலையில், ‘மான்ஸ்டர்’ படத்தின் வியாபாரம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பிவிஆர் நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா - சல்மான் கான் என இரு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதுடன், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வருவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com