வருண் தவானின் 'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான்

வருண் தவான் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாக உள்ளது.
வருண் தவானின் 'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான்
Published on

மும்பை,

கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் 'பேபி ஜான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

அட்லியின் உதவி இயக்குனர் காலிஸ் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, இந்த படத்தில் கேமியோ ரோலில் சல்மான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் வருண் தவான் இது குறித்த பேசியுள்ளார். அதாவது, "நான் அவரை பற்றி எவ்வளவு சொன்னாலும், அது எப்போதும் குறைவாகவே இருக்கும். அனைத்து பார்வையாளர்களும், முழு நாடும், அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் இப்படத்தில் சரியாக ஐந்து முதல் ஆறு நிமிட காட்சியில் வருவார். இது ஒரு பெரிய காட்சி, ஆக்சன் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய காட்சியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும் அதே நிகழ்வின் போது, இப்படம் தெறி படத்தின் நேரடி ரீமேக் அல்ல. ஆனால் நாங்கள் அதை ஒரு தழுவலாகப் பயன்படுத்தியுள்ளோம் என்று வருண் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com