நீச்சல் வீரர் ஆக விரும்பிய சல்மான்கான்

நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராகவோ, நீச்சல் வீரர் ஆகவோ ஆகியிருப்பேன்” என சல்மான்கான் அளித்த பேட்டியில் கூறினார்.
நீச்சல் வீரர் ஆக விரும்பிய சல்மான்கான்
Published on

இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சல்மான்கான் ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், லாபத்தில் பங்கும் வாங்குகிறார். சமீபத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததால் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொண்டு சுற்றுகிறார். இந்த நிலையில் தனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சல்மான்கான் அளித்துள்ள பேட்டியில், ''நானும் நிறைய தோல்விகளை எதிர்கொண்டேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு வேகமாக முயற்சி செய்வேன். என்னை யாராவது கடுமையாக விமர்சனம் செய்தாலும், கேலி செய்தாலும் வீட்டிலிருந்து வெளியே வந்து என்னை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்படும் எனது ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடுவதற்கு முயற்சி செய்வேன். அப்படி அவர்களுடன் பேசும்போது எனக்கு அவர்கள் கொடுக்கும் கவுரவத்தின் முன்பு விமர்சனங்கள் எல்லாம் தூசுக்கு சமம் எனத் தோன்றும். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இடமான பன்வேலில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு சென்று சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, பெயிண்டிங், எக்சர்சைஸ் செய்வது, பட்டங்களை பறக்க விடுவது என்று நேரத்தை கழிப்பேன். நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்திருந்தால் ஒரு எழுத்தாளராகவோ, நீச்சல் வீரர் ஆகவோ ஆகியிருப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com