சந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் தற்போது 'இங்க நான்தான் கிங்கு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
சந்தானம் நடிக்கும் 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'இங்க நான்தான் கிங்கு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'இங்க நான்தான் கிங்கு' படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com