தனுஷ் படத்தில் இணைகிறாரா சாரா அர்ஜுன்?

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ’கர’ படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.
தனுஷ் படத்தில் இணைகிறாரா சாரா அர்ஜுன்?
Published on

சென்னை,

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக சாரா அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் முன்னதாக ருக்மிணி வசந்த் கநாயகியாக நடிக்க இருந்ததாகவும், தேதிகள் பிரச்சினை காரணமாக அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

Also Read
ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” பட டிரெய்லர் வெளியானது
தனுஷ் படத்தில் இணைகிறாரா சாரா அர்ஜுன்?

தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதது.

தனுஷ் நடித்துவரும் மற்றொரு படம் டி55. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மேலும், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ’கர’ படத்திலும் தனுஷ் நடித்திருக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com