'3 பிஎச்கே' பட இசையமைப்பாளருக்கு சரத்குமார் கொடுத்த பரிசு!

'3 பிஎச்கே' படத்தின் இசையமைப்பாளர் அம்ரீத் காட்சிக்கு தேவையான இசையை அழகாக கொடுத்துள்ளார்.
'3 பிஎச்கே' பட இசையமைப்பாளருக்கு சரத்குமார் கொடுத்த பரிசு!
Published on

சென்னை,

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த் நடிப்பில் கடந்த 4-ந்தேதி வெளியான படம் 3பிஎச்கே. இப்படத்தில் தேவயானி, மிதாரகுநாத், சைத்ரா ஜே.ஆச்சார் உள்பட பலர் நடித்து இருந்தனர். பிரபல பாடகியான பாம்பே ஸ்ரீ மகன் அம்ரீத் ராம்நாத் இசை அமைத்து இருந்தார். படம் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரித்திருந்த இந்த படத்தின் நன்றி அறிவிப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் சரத்குமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

3பிஎச்கே படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் இசையமைப்பாளர் அம்ரீத் காட்சிக்கு என்ன வேண்டும் என அழகான இசையை கொடுத்து உள்ளார். அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது என் வாட்ச் ரொம்ப நல்லா இருக்கிறது என சொன்னார். எனவே இந்த வாட்சை அவருக்கு பரிசளிக்கிறேன் என கூறி கையில் கட்டி இருந்த விலை உயர்ந்த வாட்ச்சை இசையமைப்பாளர் அம்ரீத் ராம்நாத்துக்கு சரத்குமார் பரிசளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com