பரத் - சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

பரத் நடிக்க உள்ள புதிய படத்தில் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.
பரத் - சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் பரத். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கிய இப்படத்தில் சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து 'காளிதாஸ் 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்தநிலையில் பரத் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா தொடங்கியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான எம். குரு இயக்குகிறார். இத்திரைப்படத்தின் மூலம் மேகா ஷெட்டி மற்றும் மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். மேலும், சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரன்யம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com