மீண்டும் இணையும் சத்யன் அந்திகாட் - மோகன்லால் கூட்டணி

சத்யன் அந்திகாட் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மீண்டும் நடிக்கவுள்ளார்.
மீண்டும் இணையும் சத்யன் அந்திகாட் - மோகன்லால் கூட்டணி
Published on

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் ‘ஹருதயப்பூர்வம்’ படத்தில் நடித்திருந்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று ரூ. 80 கோடி வரை வசூலித்தது. கடந்த 2015ல் சத்யன் அந்திக்காடு-மோகன்லால் கூட்டணியில் வெளியான ‘என்னும் எப்பொழுதும்’ படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு ‘ஹருதயப்பூர்வம்’ படம் வெளியானது.

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சத்யன் தொடச்சியாக அடுத்தடுத்த படங்களை இயக்கக்கூடியவர் என்பதால் ஹிருதயப்பூர்வம் படத்தைத் தொடர்ந்து யாரை இயக்குவார் என்கிற கேள்வி இருந்தது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ம் தேதி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com