திரை பிரபலங்களையும், விமர்சனங்களையும் பிரிக்கவே முடியாது - அனுபமா பரமேஸ்வரன்

போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுவோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அனுபமா தெரிவித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன்
கோப்புப்படம்
Published on

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ்வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த 'பைசன்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

"திரை பிரபலங்களையும், விமர்சனங்களையும் பிரிக்கவே முடியாது. ஆனால் திட்டமிட்ட தனிநபர் தாக்குதல்களை சம்பந்தப்பட்டவர்கள் தவிர. யார் நினைத்தாலும் தடுக்கவே முடியாது.

போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுவோருக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த போக்கு ஓயும். இல்லையெனில் இங்கு எதுவும் மாறாது. தண்டனைகள்தான் இங்கு பிரச்சினைகளில் இருந்து தீர்வு தரும்" என்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com