செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது.

விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இயற்கையும், அமைதியும் சூழ்ந்த கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது.

இந்த நிலையில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.25 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com