பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் டி.வி. நடிகருக்கு ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் டி.வி. நடிகர் பிராச்சீன் சவுகானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் டி.வி. நடிகருக்கு ஜாமீன்
Published on

மும்பை,

இந்தியில் கசாத்தி ஜிந்தகி கே என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகர் பிராச்சீன் சவுகான். இந்நிலையில், இவர் மீது சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, சவுகானை போலீசார் கைது செய்தனர் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்பின் போரிவலி கோர்ட்டில் நடிகர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் தொலைக்காட்சி நடிகர் பிராச்சீன் சவுகானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com