மகளுக்காக ரூ.200 கோடியை செலவழிக்கும் ஷாருக்கான்

ஷாருக்கான் சுஜோய் கோஷ் இயக்கும் இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுஹானா கான் நடிக்க இருக்கிறார்.
மகளுக்காக ரூ.200 கோடியை செலவழிக்கும் ஷாருக்கான்
Published on

மும்பை,

பாலிவுட் பாட்ஷா, கிங்கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் திரைப்படம் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படத்தில் ஷாருக்கான் இந்திய ரா பிரிவின் ரகசிய உளவாளியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது. இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான், டர்கி ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, திரைப்படத் தயாரிப்பாளரான சுஜோய் கோஷால் இயக்க உள்ள நிலையில் ஷாருக்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. போர், பதான், பைட்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சித்தார்த் ஆனந்துடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் டைரக்டாக முயற்சி செய்து அதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். மகள் சுஹானா கான் கதாநாயகியாக விரும்புகிறார். இதையடுத்து மகள் சுஹானாகானை ரூ.200 கோடி செலவு செய்து இந்தி படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் சுஜோய் கோஷ் இயக்கும் இந்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில்தான் மகள் சுஹானா கானை நடிகையாக அறிமுகம் செய்கிறார்.

படத்தை ஷாருக்கானே ரூ.200 கோடி செலவில் தயாரிக்க இருக்கிறாராம். அதிரடி கதையம்சத்தில் உருவாகும் இந்த படத்தில் தனது மகளின் நடிப்பு ரசிகர்களை கவர வேண்டும் என்ற அக்கறையில் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்குகிறார். இந்த படம் ரிலீசானதும் மகளுக்கு அதிக சினிமா வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறார்.இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அடுத்த வருடம் படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com