"எனக்கு கொடுத்த அன்பில் 50 சதவீதம்…" - மகனுக்காக உருக்கமாக பேசிய ஷாருக்கான்

ஆர்யன் கான் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் தற்போது 'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்'என்ற வெப் தொடர் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இந்த தொடரை ஷாருக்கான் தயாரிக்க நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
இது தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது நடிகர் ஷாருக்கான்,
"இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கும் எனது மகனும், நடிகையாக அறிமுகமாக உள்ள எனது மகளும், நீங்கள் எனக்கு அளித்த அன்பில் 50 சதவீதத்தை பெற்றால் அதுவே எனக்கு போதும்" என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.
Related Tags :
Next Story