"காதலிக்க நேரமில்லை" - மனம் திறந்த பாப் பாடகி ஷகீரா

2010 பிபா உலகக் கோப்பைக்காக ஷகீரா பாடிய பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
"காதலிக்க நேரமில்லை" -  மனம் திறந்த பாப் பாடகி ஷகீரா
Published on

வாஷிங்டன்,

உலகப் புகழ்பெற்ற கொலம்பிய பாப் பாடகியான ஷகீரா, தற்போது தனது வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லை என்றும், தனது குழந்தைகள் மற்றும் இசைப் பயணத்திலேயே முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு நடைபெற்ற 2010 பிபா உலகக் கோப்பை தொடருக்காக அவர் பாடிய ’வகா வகா’ (This Time for Africa) பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளதுடன், யூடியூபிலும் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

Also Read
மீண்டும் டிரோல்களில் சிக்கிய நடிகை அனன்யா பாண்டே
"காதலிக்க நேரமில்லை" -  மனம் திறந்த பாப் பாடகி ஷகீரா

ஷகீரா, கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்டகால துணையும் முன்னாள் கால்பந்து வீரருமான ஜெரார்ட் பிக்கேவிடமிருந்து பிரிந்தார். இவர்களுக்கு மிலன் மற்றும் சாஷா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

பிரிவுக்கு பிறகு தனியாக வாழ்ந்து வரும் ஷகீரா, தற்போது தனது குழந்தைகள் மற்றும் இசை வாழ்க்கையிலேயே முழுமையாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில், "தற்போதைக்கு என் வாழ்க்கையில் காதலுக்கு இடமில்லை. அதற்கான நேரமும் இல்லை. என் கைகள் நிறைய வேலைகளால் நிரம்பியுள்ளன. என் குழந்தைகளுக்குத்தான் முதன்மை கொடுக்கிறேன். அதன்பிறகு என் தொழில். என் வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது என் தொழிலையே அதிகமாக நேசித்து வருகிறேன். இந்த தனிமையான நேரத்தையும் நான் ரசித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையை விட குழந்தைகள் மற்றும் இசைத் துறையில் சாதிப்பதற்கே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com