ஷேன் நிகாமின் 25-வது பட டைட்டில் வெளியீடு

ஷேன் நிகாமின் 25- வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கி வருகிறார்.
Published on

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ஷேன் நிகாம் தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி வருகிறது. .இப்படத்திற்கு 'பல்டி' எனப் பெயரிட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் டைட்டில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் ஓணம் வெளியீடாக திரைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com