சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

'இராவண கோட்டம்' படத்தின் முதல் பாடல், மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இராவண கோட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com