

சென்னை,
இந்திய சினிமாவில் பயோபிக் படங்களின் டிரெண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே தோனி, சச்சின் போன்ற வீரர்களின் பயோபிக் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளநிலையில், ரோகித் சர்மாவின்(ஹிட்மேன்) பயோபிக் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நடிகர் ஷர்வானந்த், ரோகித் சர்மா கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து கேள்வி எழுந்தது, அதற்கு பதிலளித்த அவர், “ரோகித் சர்மா பயோபிக் குறித்து நானும் கேள்விப்பட்டேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். ‘பைக்கர்’ படம் ஏப்ரல் 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது.