

சென்னை,
2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரத்ன குமார். இதன்பின் இவர் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரத்னகுமார் இயக்கி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு 29 எனப் பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், '29' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.