மும்பையில் சொந்தமாக குடியிருப்பு வாங்கிய ஸ்ரேயா கோஷல்..விலை எவ்வளவு தெரியுமா?

பாடகி ஸ்ரேயா கோஷல் மும்பையின் வோர்லி பகுதியில் புதிய அபார்மெண்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
மும்பையில் சொந்தமாக குடியிருப்பு வாங்கிய ஸ்ரேயா கோஷல்..விலை எவ்வளவு தெரியுமா?
Published on

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க வைத்தவர் ஸ்ரேயா கோஷல், 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ள ஸ்ரேயா கோஷல், 24 வருடங்களாக திரைப்பட உலகில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் பிறந்த ஸ்ரேயா கோஷல், தற்போது மும்பையின் வோர்லி பகுதியில் புதிய அபார்மெண்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன்மதிப்பு சுமார் 29.7 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. 5000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள, 2750 சதுர அடி கட்டுமானம், மூன்று கார் பார்க்கிங் வசதி கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றைத்தான் ஸ்ரேயா கோஷல் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் 1.78 கோடி ரூபாய் முத்திரைக் கட்டணம் செலுத்தி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com