'கூலி' படப்பிடிப்பில் இணைந்த சுருதிஹாசன்


கூலி படப்பிடிப்பில் இணைந்த சுருதிஹாசன்
x

கூலி படத்தில் நடிகை சுருதிஹாசன் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நடிகை சுருதிஹாசன் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இதை குறிப்பிடும் வகையில் சுருதிஹாசன் மேக்கப் போடும் போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் 'பிரீத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story