தள்ளிப்போகிறதா ஜான்வி கபூரின் ''பரம் சுந்தரி''?

இப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
சென்னை,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டுள்ளது.
தினேஷ் விஜனின் மோடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். 'தேவரா' திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், படம் சொன்ன தேதியில் வெளியாக வாய்ப்பில்லை எனவும், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Related Tags :
Next Story






