'சிக்கந்தர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சிக்கந்தர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2025 12:04 PM IST (Updated: 20 March 2025 3:51 PM IST)
t-max-icont-min-icon

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மதராஸி' எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும், பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது.

1 More update

Next Story