பாடகி ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் - வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம்


பாடகி ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் - வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம்
x
தினத்தந்தி 11 July 2025 1:28 PM IST (Updated: 11 July 2025 6:38 PM IST)
t-max-icont-min-icon

பாடகி ஆஷா போஸ்லே இறந்து விட்டதாக பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவர் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்தநிலையில் பாடகி ஆஷா போஸ்லே இறந்து விட்டதாக பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம் கொடுத்துள்ளார்.

1 More update

Next Story