'சத்தங்களுக்கு இடையே...புதிய தொடக்கத்தை நோக்கி' : ரவி மோகன் சர்ச்சைக்கு மத்தியில் பாடகி கெனிஷாவின் பதிவு வைரல்


Singer Kenisha’s post goes viral amid Ravi Mohan controversy
x
தினத்தந்தி 19 May 2025 1:23 PM IST (Updated: 25 May 2025 3:47 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவு பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை,

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி தம்பதியரின் பிரிவும், பாடகி கெனிஷாவை 'என்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர்' என்று ரவிமோகன் சொன்னதும் பரபரப்பு விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

'ஒரு தந்தையாக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்' என்று ஆர்த்தியும், அவருக்கு பதில் அளித்து 'நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன். முன்னாள் மனைவியும், அவரது குடும்பத்தினரும் என்னை அவர்களின் கடனுக்கு ஜாமீன் போட வைத்தனர்' என்று ரவிமோகனும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் பாடகி கெனிஷா, ரவி மோகன் சர்ச்சைக்கு மத்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன், காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழமான சோகத்தின் நடுவே, மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story