ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய பாடகி ஷ்ரேயா கோஷல்

பாடகி ஷ்ரேயா கோஷல் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர குடியிருப்பை வாங்கியுள்ளார்.
ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய பாடகி ஷ்ரேயா கோஷல்
Published on

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க வைத்தவர் ஸ்ரேயா கோஷல், 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ள ஸ்ரேயா கோஷல், 24 வருடங்களாக திரைப்பட உலகில் வெற்றி நடை போட்டு வருகிறார்.

இந்த நிலையில், பாடகி ஷ்ரேயா கோஷல் தனது குடும்ப உறுப்பினர்களான சர்மிஸ்தா கோஷல் மற்றும் பிஸ்வஜித் கோஷல் ஆகியோருடன் இணைந்து, மும்பையின் சாண்டாக்ரூஸ் மேற்கில் ரூ. 20.88 கோடிக்கு ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். மூன்று மாத கால இடைவெளியில் ஷ்ரேயா கோஷல் குடும்பம் வாங்கும் மூன்றாவது சொத்து இதுவாகும். முன்னதாக, அவர்கள் வோர்லியில் உள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் ரூ.60 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com