அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம்... வெளியானது அறிவிப்பு

மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம்... வெளியானது அறிவிப்பு
Published on

சென்னை,

'குட் பேட் அக்லி' மற்றும் 'டியூட்' ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ்த் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மொத ராத்திரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் அனிஷ்மா அனில்குமார், 2023-ல் வெளியான 'பூவன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சமீபத்தில் வெளியான 'சிறை' (2025) மற்றும் 'யூத்' ஆகிய படங்களின் வெற்றி, இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.

Also Read
'டாக்சிக்' படத்தில் கவர்ச்சி காட்சி... கியாரா அத்வானி எடுத்த திடீர் முடிவு? - அதிர்ச்சியில் படக்குழு
அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம்... வெளியானது அறிவிப்பு

தற்போது மைத்ரி நிறுவனத்தின் பிரமமாண்ட தயாரிப்பில் உருவாகும் 'மொத ராத்திரி' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com