சிவகார்த்திகேயனின் 27வது படம்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் 27வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சிவகார்த்திகேயனின் 27வது  படம்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Published on: 

சென்னை,

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 05.27 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்

‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்கே 27’

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது. பார்க்கிங்’ திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக தற்காலிகமாக ‘எஸ்கே 27’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ‘எஸ்கே 27’ திரைப்பட அப்டேட்

சிவகார்த்திகேயனின் 27வது படமான இந்த படத்தை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இதில் கயாடு லோஹர், சுதாகர், ஜார்ஜ் மேரியன், விடிவி கணேஷ், மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 05.27 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தபடத்திற்கு இசையமைக்க உள்ள இசையமைப்பாளருக்கான அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com