சிவகார்த்திகேயனின் 'சேயோன்' - ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் "சேயோன்" படத்தினை சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' - ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு தொடக்கம்!
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது தனது 26வது திரைப்படமான ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். மேலும், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். நடிகர்கள் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ப்ன தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற 27ந் தேதி முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com