டிராபிக்கில் 5 மணிநேரம் சிக்கித் தவித்த நடிகை - வீடியோ பகிர்ந்து உருக்கம்

நடிகை போக்குவரத்து நெரிசலில் சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிராபிக்கில் 5 மணிநேரம் சிக்கித் தவித்த நடிகை - வீடியோ பகிர்ந்து உருக்கம்
Published on

மும்பை,

'தில் சாஹ்தா ஹை' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சோனாலி குல்கர்னி, மும்பையில் போக்குவரத்து நெரிசலில் சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக ஓரே இடத்தில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை இரவு மும்பையிலிருந்து புனே நோக்கி காரில் சென்று கொண்டிருந்த சோனாலி குல்கர்னி, மும்பையின் மன்குர்த் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். ஏறக்குறைய 5 மணிநேரமாக வாகனங்கள் ஒரு அங்குலம் கூட நகர முடியாத சூழல் நிலவியுள்ளது.

Also Read
சிம்ரனின் அடுத்த படம்... டைட்டில் வெளியீடு
டிராபிக்கில் 5 மணிநேரம் சிக்கித் தவித்த நடிகை - வீடியோ பகிர்ந்து உருக்கம்

இந்த சூழலில் காரை விட்டு வெளியே வந்த சோனாலி வீடியோ எடுத்து அதனை தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நான் இப்போது மன்குர்த் பாலத்தில் இருக்கிறேன். சரியாக 5 மணிநேரமாக ஒரே இடத்தில் சிக்கியிருக்கிறேன். இந்த நெரிசல் எப்போது சரியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. முன்னால் செல்லவும் முடியவில்லை, பின்னால் திரும்பவும் முடியவில்லை. உணவு கூட கிடைக்கவில்லை, மிகவும் பயமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதே இந்த போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகை சோனாலி குல்கர்னி 2001-ல் சையப் அலிகானுக்கு ஜோடியாக 'தில் சாஹ்தா ஹை' படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிங்கம், டாக்ஸி நம்பர் 9211 போன்ற ஹிந்திப் படங்களிலும், பல மராத்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com