மகன் பிறந்தநாள்.. ரவிமோகன் வெளியிட்ட எமோஷனல் பதிவு


மகன் பிறந்தநாள்.. ரவிமோகன் வெளியிட்ட எமோஷனல் பதிவு
x
தினத்தந்தி 30 Jun 2025 8:45 AM IST (Updated: 30 Jun 2025 8:46 AM IST)
t-max-icont-min-icon

மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரவிமோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில், ரவி மோகனுக்கும் அவரது மனைவியான ஆர்த்திக்கும் இடையே கருத்து முரண்பாடு மற்றும் மன கசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.ரவி மோகன் அவரது காதலியான கெனிஷா உடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மூத்த மகன் ஆரவ் பிறந்தநாள் என்பதால் ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் சந்தித்து பேசி இருக்கிறார். மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ரவி, 'என்னுடைய பெருமை.. என் குரும்பாக்கள்' என்று எமோஷனலாக பதிவிட்டுள்ளார். அவரது மூத்த மகன் ஆரவ் ரவிமோகனுடம் இணைந்து "டிக் டிக் டிக்" படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story