இந்திய டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடியை கடந்த “ஸ்பைடர்மேன்”

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு வெளியாக உள்ள ‘ஸ்பைடர்மேன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்திய டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடியை கடந்த “ஸ்பைடர்மேன்”
Published on

ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே‘ஸ்பைடர்மேன்’ படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அனைத்து மொழிகளிலும் டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பும் ஸ்பைடர்மேன்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையின் அடுத்த பாகமான ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியாக தயாராகியுள்ளது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்’ திரைப்படத்திற்கு பிறகு, ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படலான், சேடி சிங், ஜான் பெர்ன்தால், மார்க் ரப்பலோ, மைக்கேல் மாண்டோ மற்றும் டிராமெல் டில்மேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்ட திரைப்படம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் திரையிடப்பட உள்ளது.

முன்பதிவு தொடங்கியது

சமீபத்தில் ‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்தது. 2டி, 3டி, 4டி.எக்ஸ்., டால்பி சினிமா 3டி, பி.எக்ஸ்.எல்., பிக் பிக்ஸ், ஸ்கிரீன் எக்ஸ், ஐஸ் மற்றும் எம்.எக்ஸ்.4டி உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் திரை வடிவங்களிலும் படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான படத்தின் இரண்டாவது டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்’ படம் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே அனைத்து மொழிகளிலும் டிக்கெட் முன்பதிவில் ரூ.25 கோடியை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. டாம் ஹாலண்ட் நடித்துள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் ஜூலை 30ம் தேதி வெளியாகவுள்ளது. ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்திற்குப் பிறகு, டாம் ஹாலண்ட் நான்காவது முறையாக ஸ்பைடர்மேனாக நடித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com