மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தனது குணநலன் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில்
மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தனது குணநலன் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு மனரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன. அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். சிறிய விஷயத்துக்கும் பொறுமை இழந்து கோபப்பட்டு விடுவேன். முதலில் எனது பிரச்சினைகள் பற்றி பேச பயந்து இருந்தேன். அதன்பிறகு பலர் தங்களுக்குள்ள மனரீதியான பிரச்சினைகளை பேச ஆரம்பித்த பிறகு எனக்கும் வெளியே சொல்லலாம் என்று தோன்றியது.

மனரீதியான ஆரோக்கியத்திற்காக சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். இசை கூட எனது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு வழிதான். இப்போதும் நினைத்தது நினைத்தபடி நடக்காவிட்டால் அது படப்பிடிப்பு தளத்தில் ஆக இருக்கட்டும் வீட்டிலாக இருக்கட்டும் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். நிலைமை தீவிரமாகிறது என்று தோன்றினால் உடனே தெரபி சிகிச்சைக்கு செல்கிறேன்.

இப்போது எனக்குள்ள இந்த பிரச்சினைகளை மறைக்க நினைப்பது இல்லை. மறைக்கும் போதுதான் இன்னும் அதிகமான நெருக்கடி வருகிறது. என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று பயப்படுவோம். ஒரு முறை பிரச்சினையை பேசி பாருங்கள் மனதில் இருக்கும் பாரம் நிச்சயம் குறைந்துவிடும். தீர்வுக்கான வழியும் பிறக்கும். எனவே பிரச்சினை எதுவாக இருந்தாலும் மனம் திறந்து பேசுங்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com