முடிவு எதுவாக இருந்தாலும் அது...ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி கருத்து

இறுதிப்போட்டி மனவேதனை தரும்படி இருக்கப் போவதாக இயக்குனர் ராஜமவுலி கூறி இருக்கிறார்.
சென்னை,
நாளை நடைபெற உள்ள ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதாரின் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த 2 அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது என்பதால் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இறுதிப்போட்டி மனவேதனை தரும்படி இருக்கப் போவதாக இயக்குனர் ராஜமவுலி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார், கழட்டி விடப்பட்டார்....கொல்கத்தா அணியை கோப்பை வெல்ல வைத்தார்...கழட்டி விடப்பட்டார். தற்போது பஞ்சாப் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இப்போதும் அவர் கோப்பை வெல்ல தகுதி வாய்ந்தவர்.
மறபுறம், விராட் கோலி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடுகிறார். ஆயிரக்கணக்கான ரன்களை குவிக்கிறார். அவரும் இறுதிப்போட்டியில் உள்ளார். கோலியும் கோப்பை வெல்ல தகுதி வாய்ந்தவரே. முடிவு எதுவாக இருந்தாலும் அது மனவேதனை தரும்படி இருக்கப்போகிறது' என்று தெரிவித்திருக்கிறார்.






