'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் மகேஷ் பாபு கதாபாத்திரத்தின் பெயர் இதுவா?

இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
SSMB29 - Is this Mahesh Babu character name
Published on

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், மகேஷ் பாபு கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் மகேஷ் பாபுவுக்கு 'ருத்ரா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com