

சென்னை,
நடிகை சமந்தா விவாகரத்து, மயோசிடிஸ் நோய் போன்ற பின்னடைவுகளில் இருந்து மீண்டு இப்போது பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார். அதோடு 'பாட்காஸ்ட்' மூலம் ஆரோக்கிய விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது இதில் சொந்த வாழ்க்கை பற்றி பல விஷங்களை பகிர்ந்துள்ளார். சமந்தா கூறும்போது,
எனக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவு ரசிகர்களை சேர்த்து வைத்து இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. என் பேச்சை கேட்கும் ரசிகர்கள் இருப்பதை அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். எனது ரசிகர்கள் நிறைய பேருக்கு பேஷன், மேக்கப் விஷயங்களில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆரோக்கிய விஷயங்கள் குறித்து நான் பேசுவது சிலருக்கேனும் தாக்கத்தை ஏற்படுத்தினால் சந்தோஷப்படுவேன்.
எனது மனதுக்கு பிடித்ததை செய்வேன். எந்த முடிவை எடுத்தாலும் அது சரியானதுதானா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக்கொள்வேன். மனரீதியாக அமைதியாக இல்லாவிட்டால் உடல் ரீதியாக பிட்டாக இருக்க முடியாது. எனவே மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். நான் எப்போதும் மெண்டல் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதற்கு தேவையான உடல்பயிற்சிகளும் செய்கிறேன்'' என்றார்.
View this post on Instagram