சினிமாவில் வெற்றி, தோல்விகள் சகஜம் - நடிகை பூஜா ஹெக்டே

சினிமாவில் வெற்றி, தோல்விகள் சகஜம் - நடிகை பூஜா ஹெக்டே
Published on

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமாகி விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சினிமா அனுபவங்கள் குறித்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். அதை யாரும் கணிக்க முடியாது. சில கதைகளை கேட்கும்போது அற்புதமாக தோன்றும். ஆனால் திரையில் வரும்போது சப்பென்று ஆகிவிடும். அதே சமயத்தில் சாதாரணமாக தோன்றிய கதைகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்பட கூடாது. நான் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்த மொகஞ்சதாரோ கதையை கேட்டு மிகவும் வியந்து போனேன். இந்தி சினிமா வாழ்க்கை ஆரம்பமே மிகச்சிறப்பாக இருக்கிறது என நினைத்தேன். ஆனால் அந்த படம் நன்றாக போகவில்லை. என் எதிர்பார்ப்பு தவறாகிவிட்டது.

நிறைய படங்கள் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. கதை பிடித்திருந்தால் நடிப்பது வரை தான் நமது கையில் இருக்கும். வெற்றி தோல்வி என் எல்லைக்குள் இருக்காது. எனவே தோல்வி பற்றி அதிகமாக யோசிக்காமல் வந்த வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com