டைட்டில் அறிவிப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த சுதா கொங்கரா

'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டைட்டில் அறிவிப்பதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த சுதா கொங்கரா
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூரரைப்போற்று'. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கோ.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். மேலும் ராதிகா மதன், பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com